டென்னிஸ் வரலாற்றில் முதன் முறையாக 100 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டப் போவது யாரு? | Roger Federer, Novak Djokovic poised to become first $100 million men in tennis

வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (28/12/2015)

கடைசி தொடர்பு:16:00 (28/12/2015)

டென்னிஸ் வரலாற்றில் முதன் முறையாக 100 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டப் போவது யாரு?

 டென்னிஸ் வரலாற்றில் முதன் முறையாக 100 மில்லியன் பரிசுத் தொகையை ஈட்டிய வீரர் என்ற பெருமையை சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் பெறவுள்ளார்.

இது வரை டென்னிஸ் வரலாற்றில் பரிசுத் தொகையாக இவ்வளவு பெரியத் தொகையை எந்த டென்னிஸ் வீரரும் ஈட்டியதில்லை. ரோஜர் ஃபெடரர் இதுவரை 97.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக ஈட்டியுள்ளார். தற்போது 28 வயது ஜோகோவிச் 94 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக வென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் மோதலான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்  போது, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்  100 மில்லியன் அமெரிக்க டாலர்களை(  இந்திய மதிப்பில் ரூ. 660 கோடி ) பரிசுத் தொகையாக வென்ற சாதனை படைப்பார் என்று கருதப்படுகிறது.  ரோஜர் ஃ பெடரருக்கு இந்த தொகையை எட்ட இன்னும் 3.85 அமெரிக்க மில்லியன் டாலர்களே தேவையுள்ளது. இந்த போட்டியின் போது செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் 100 மில்லியன் டாலர்களை பரிசுத் தொகையாக ஈட்டி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர விளம்பரங்களில் நடிப்பது உள்ளிட்ட பிற வழிகளில் ரோஜர் ஃபெடரர் கடந்த ஆண்டு 58 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக  ஈட்டியுள்ளார். அதாவது அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் ' போர்ப்ஸ்' பட்டியலின்படி,  ரோஜர் ஃபெடரருக்கு 5வது இடம். இந்த பட்டியலில் ஜோகோவிச் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள்  வருவாயுடன் 13வது இடத்தில் உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்