டெல்லி கிரிக்கெட் அணி தேர்வாளர் மீது அரவிந்த் கெஜ்ரிவால் பாலியல் குற்றச்சாட்டு

டெல்லி கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த தேர்வாளர் ஒருவர் மீது அரவிந்த் கெஜ்ரிவால் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் மீது அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் உள்ளிட்ட, பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் தனது மகனை அணிக்கு தேர்வு செய்வதற்காக தேர்வாளர் ஒருவரை அணுகியதாகவும், அப்போது அந்த பத்திரிகையாளரின் மனைவியை அந்த தேர்வாளர் படுக்கைக்கு அழைத்தார் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

ஆனால் அந்த பத்திரிகையாளரின் பெயரையோ, தேர்வாளரின் பெயரையோ அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிக்கவில்லை. ஆனார் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டால், அந்த பத்திரிகையாளர் விசாரணையில் ஆஜராவார் என்றும் கூறியுள்ளார்.

ஊழல்,பாலியல் குற்றச்சாட்டுகளில்  டெல்லி கிரிக்கெட் சங்கம் திளைப்பதாகவும் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவரும் நிதியமைச்சருமான அருண் ஜெட்லியை காப்பாற்றும் நோக்கத்தில், பிரதமர் மோடி செயல்படுவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குறை கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமாரின் அலுவலகம், வீடு உள்ளிட்டவற்றில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!