தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா!

மிழகத்தின் சங்கருக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக பணியாற்ற ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனைக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா லைசென்ஸ் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கால்பந்து விளையாட்டில் திண்டுக்கல் வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ருபாதேவி தற்போது பிஃபா நடுவராக தேர்வாகியுள்ளார்.

தற்போது 25 வயதான ரூபாதேவி , பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியருக்கான படிப்புகளை படித்துள்ளார்.  மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர். தமிழக மற்றும் இந்திய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

அத்துடன் கால்பந்து நடுவராக செயல்படவும் ரூபாதேவி பாதேவி பயிற்சி பெற்று வந்தார். தேசிய அளவிலான போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி அவர், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டார். ரூபாதேவி பாதேவியின் செயல்பாடுகள் திருப்தி அளித்ததையடுத்து, அவருக்கு சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்படுவதற்கான லைசென்சை தற்போது பிஃபா அளித்துள்ளது.

 தென்னிந்தியாவில் இருந்து  பெண் ஒருவர் இத்தகைய அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல் முறை. தமிழகத்தை பொறுத்தவரை, இதற்கு முன் சென்னையை சேர்ந்த கோமலேஸ்வரன் சங்கர், சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் துணை நடுவராக சங்கர் பணியாற்றினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!