ஒரு நல்ல காரியத்திற்காக - சி.சி.எல். | Celebrity Cricket League 6

வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (14/01/2016)

கடைசி தொடர்பு:13:17 (14/01/2016)

ஒரு நல்ல காரியத்திற்காக - சி.சி.எல்.

நேற்று சென்னையின் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீகின் லான்ச்(தொடக்க விழா) நடந்தது. இதில் சென்னை அணியினரும், ஆந்திர அணியினரும் கலந்து கொண்டிருந்தனர். சென்னை அணியின் நட்சத்திர வீரர்களான ஜீவா,ஷ்யாம்,பரத், சாந்தனு, ரமணா,போஸ் வெங்கட் ஆகியோருடன் ஆந்திர அணியில் இருந்து அகில் அக்கினேனி, பந்து வீச்சு பயிற்சியாளர் ஸ்ரீசாந்த்தும் பங்கேற்றனர். சி.சி.எல்'லிற்கே உரிதான வசீகரத்தை உணர்த்தும் வகையில் நடிகை ப்ரனீதாவும், அதா ஷர்மாவும் கலந்து கொண்டனர்.    

இந்த முறை சி.சி.எல் ஆறாவது சீசன்,  ஜனவரி 23 அன்று துவங்க உள்ளது. முதல் மேட்ச் பெங்களூரில் இருக்கும் எம்.ஏ.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் நான்கு ஆண்டுகளுக்கு வெறும் நிதித் திரட்டுவதற்கான நிகழ்ச்சியாக மற்றும் நடந்த சி.சி.எல், தனது ஐந்தாவது (2015) சீசனில் இருந்து ஒரு நோக்குடன் செயல்படத் தொடங்கியது என பேசத் தொடங்கினார் "தெலுகு வாரியர்ஸ்" அணியின் உரிமையாளர் சச்சின் ஜோஷி.  

"2015- ம் ஆண்டு நடந்த சி.சி.எல்' ல் திரட்டிய நிதியைக் கொண்டு,  100 ஏழைக் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை, இதயமாற்றம் போன்ற உதவிகள்  ஹ்ருதயா மருத்துவ நிறுவனத்தின் உதவியோடு நிறைவேற்றப்பட்டது.

போன சீசனில் பேட்ஸ்மேன் அடிக்கும் ஒவ்வொரு ரன்னிற்கும் 1000 ரூபாய் என்ற கணக்கில் நிதி ஒதுக்கப் பட்டது. ஆனால் இந்த சீசனில் ஒரு ரன்னிற்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் ஒதுக்கி, இன்னும் விரிவுப் படுத்தத்திட்டமிட்டுள்ளது.

"ரீஸ்டோர் இந்தியா" என தொடங்கிய இத்திட்டத்தினால், முடிந்த வரை மருத்துவ உதவிகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த முறை வரும் நிதியில் இருந்து இந்தியாவில் ஆசிட்-வீச்சு மற்றும் தீக்காயத்தினால் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் அப்பாவிப் பெண்களுக்கு உதவ உள்ளோம்" என்று சச்சின் தெரிவித்தவுடன் அனைவரின் கைத்தட்டல்களும் அரங்கத்தை நிரப்பியது.

அதன் பின் நடந்த கேள்வி பதில் நேரத்தில்,  ஜீவா கலகலப்பாக பதில் அளித்தார். வுமன் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் ஆரம்பிக்கும் ஐடியா உள்ளதா? என்ற கேள்விக்கு, "அப்படி ஆரம்பித்தால், நான்தான் அதற்கு ப்ராண்ட் அம்பாஸ்டர்" என்று அரங்கை அதிர வைத்தார். சென்னை அணியைப் போல், ஒரு ஜாலியான அணியை எங்கும் பார்த்ததில்லை என மற்ற அணியினர் வியந்து போவார்கள். எங்களுக்குள் அவ்வளவு ஒற்றுமை " என்று கூறினார்.

மு.சித்தார்த்
புகைப் படங்கள் : ம.பி.சித்தார்த்

(மாணவப் பத்திரிக்கையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்