வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (19/01/2016)

கடைசி தொடர்பு:15:20 (19/01/2016)

ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி !

ஸ்திரேலிய ஓபனில், உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள  ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

சக நாட்டு வீரரான பெர்னான்டோ வெர்டாஸ்கோவிடம், முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்து அவர் வெளியேறியுள்ளார். வெர்டோஸ்கா 7-6, 4-6 ,3-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சுமார் 4 மணி நேரம் 41 நிமிடம் நீடித்த இந்த போராட்டத்தில், 5வது  செட்டில் 2-0 என்று நடால் முன்னணியில் இருந்தார். ஆனால் பின்னர், தொடர்ச்சியாக அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றிய  வெர்டோஸ்கா, இறுதியில் அபார வெற்றி பெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வி காண்பது இதுதான் முதல் முறை. இதற்கு முன் கடந்த 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில், இதே ஜோடி மோதிய அரையிறுதி ஆட்டம், 5 மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்றது. 5 செட்கள் வரை நீடித்த இந்த போட்டியில், நடால் வெற்றி பெற்றார். தற்போது முடிவு மாறியுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்