இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங் மீது பிரிட்டன் ஹாக்கி வீராங்கனை பாலியல் புகார்! | Indian Hockey skipper Sardar Singh accused of sexual harassment

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (03/02/2016)

கடைசி தொடர்பு:14:42 (03/02/2016)

இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங் மீது பிரிட்டன் ஹாக்கி வீராங்கனை பாலியல் புகார்!

ந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது பிரிட்டனை சேர்ந்த ஹாக்கி வீராங்கனை ஒருவர்  பாலியல் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், '' கடந்த 2012-ம் ஆண்டு  லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக சர்தார் சிங் வந்த போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னுடன் 4 ஆண்டுகள் பழகினர்.கடந்த 2014-ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயம் நடந்தது.  அந்த வகையில் நான் கர்ப்பம் தரித்தேன்.

 எனது விருப்பத்திற்கு மாறாக கருவை கலைக்கச் சொன்னார். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்று கொள்ளலாம் என்று என்னிடம் கூறினார். அதனை நம்பி நானும் கருவை கலைத்தேன். ஆனால் அதற்கு பின் என்னை சந்திப்பதை அவர் தவிர்த்தார். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ளவும் மறுக்கிறார். அத்துடன் என்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தினார்'' என தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெல்ஜியத்தில் நடந்த உலக ஹாக்கி சீரிஸ் அரையிறுதி ஆட்டத்தின் போது, இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கே  அந்த பெண்,  போலீசுடன் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

சர்தார் சிங் மீது புகாரளித்த பெண், இங்கிலாந்தின் லீட்ஸ் நகரை சேர்ந்தவர் பிரிட்டன் ஹாக்கி அணியில்,  19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்த  முதல் சீக்கிய சமுதாய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர்.  தற்போது 21 வயதாகிறது. புகாரைத் தொடர்ந்து சர்தார் சிங் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்