ரஞ்சி இறுதியில் ராஜஸ்தான் உறுதி: சக்சேனா இரட்டை சதம் | தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில், ராஜஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (20/01/2012)

கடைசி தொடர்பு:17:23 (20/01/2012)

ரஞ்சி இறுதியில் ராஜஸ்தான் உறுதி: சக்சேனா இரட்டை சதம்

சென்னை: தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில், ராஜஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.

தமிழகம், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பைக்கான இறுதிப் போட்டி, சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில், ராஜஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸ்சில், 2 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்திருந்தது. அந்த அணியின் சக்ஸேனா இரட்டை சதம் அடித்த நிலையில் களத்தில் உள்ளார். அவர்கள் ஆட்டமிழக்காமல் 207 ரன்கள் குவித்துள்ளார்.

மறுமுனையில் ராபின் பிஸ்ட் 16 ரன்களுடன் உள்ளார். முன்னதாக, சோப்ரா 94 ரன்களிலும், கனிட்கர் 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தமிழகம் தரப்பில் அபிஷேக் ஸ்ரீனிவாஸ், குப்தா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்