ரஞ்சி இறுதி: தமிழக அணி திணறல்

சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில், தமிழகம் திணறி வருகிறது.

சென்னையில் நடைபெற்று வரும் இப்போட்டியின், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், தமிழக அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது.

தினேஷ் கார்த்திக் 13 ரன்களுடனும், வாசுதேவதாஸ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர், துவக்க ஆட்டக்காரர் முகுந்த் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முரளி விஜய் 15 ரன்களிலும், பத்ரிநாத் 6 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்.ஆர்.சிங் 2 விக்கெட்டுகளையும், பங்கஜ் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, ராஜஸ்தான் தனது முதல் இன்னிங்ஸ்சில் 621 ரன்கள் குவித்தது. இதில், சக்சேனா மட்டும் 257 ரன்கள் குவித்தார்.

தற்போது, ராஜஸ்தானை விட தமிழகம் 555 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!