ரஞ்சிக் கோப்பையை தக்கவைத்தது ராஜஸ்தான் அணி!

சென்னை: தமிழகத்துக்கு எதிரான இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகித்த ராஜஸ்தான் அணி, ரஞ்சிக் கோப்பை தக்கவைத்துக் கொண்டது.

இதன் மூலம், ரஞ்சிக் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற ஐந்தாவது அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது.

ராஜஸ்தான் - தமிழகம் அணிகளுக்கு இடையே ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டி, சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்து வந்தது.

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று, நேர முடிவில் தமிழக அணி 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது.

எனினும், முதல் இன்னிங்ஸ்சில் முன்னிலை வகித்ததன் அடிப்படையில், ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றது.

ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்சில் 621 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸ்சில் 204 ரன்களையும் எடுத்தது. தமிழக அணி முதல் இன்னிங்ஸ்சில் 295 ரன்கள் சேர்த்தது.

இப்போட்டியில் இரட்டை சதம் அடித்த ராஜஸ்தானின் சக்ஸேனா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!