நடால்... 'நச்' ன்னு 14 விஷயங்கள்!

1.ஜூன் 3, 1986 ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். 3 வயது முதலே டென்னிஸ் மட்டையைப் பிடிக்க ஆரம்பித்தவர் நடால்.

2. இவருடைய 8 வயதிலேயே 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றார். அப்போது அவர் கால்பந்து ஆட்டத்திலும் தேர்ந்தவராக இருந்தார்.

3.இவர் இடது கையால் டென்னிஸ் விளையாடும் பழக்கமும் , வலது கையால் எழுதும் பழக்கமும் கொண்டவர்.

4.இவர் எந்த ஒரு பதக்கம் வென்றாலும் அதை பல்லால் கடித்துக் கொண்டாடுவார். இவர் வென்ற எந்த ஒரு கோப்பையையும் இவரது பற்கள் பதம் பார்க்காமல் விட்டதில்லை.


5. எப்போது பிரெஞ்சு ஒப்பன் கோப்பையை வென்றாலும் தரையில் விழுந்து அதை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உடையவர்.

6.2003 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோளுக்கு ரபேல் நடாலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

7. பொதுவாக டென்னிஸ் விளையாடுவோர் தாங்கள் ஆடும் கிரவுண்டிற்கு ஏற்ப மட்டையின் எடையை மாற்றுவார்கள். ஆனால் எங்கு விளையாடினாலும் நடாலின் மட்டை 55 பவுண்ட் எடையிலிருந்து மாறாது.

8. மிக இளம்  வயதில் விம்பிள்டன் போட்டியின் 3வது சுற்றுக்கு தேர்ச்சி பெற்றவர் இவர்தான். ரோஜெர் பெடரரை வீழ்த்தி இவர் தகுதி பெறும்போது இவருக்கு வயது வெறும் 17 தான்!

9. நடால், இந்தியாவில் ஒரு டென்னிஸ் பயிற்சிப் பள்ளியைத் துவங்கியுள்ளார்.

10.2005 ல் இருந்து 2௦14 ம் ஆண்டு வரை தொடர்ந்து 1௦ வருடங்களாக ஒரு முறை கூட கிராண்ட் ஸ்லாம் பட்டதை இவர் விட்டுக்கொடுத்ததில்லை. நான்கில் ஏதேனும் ஒரு பட்டதை வென்று விடுவார்.

11.இவருக்கு வாட்டர் பாட்டில் சென்டிமென்ட் அதிகம். ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை தன்னுடைய வாட்டர் பாட்டிலை யாரையும் தொடவோ நகர்த்தவோ விட மாட்டார்.

12. இவருக்கு 'கிங் ஆப் க்ளே' என்கிற பட்டப்பெயர் உண்டு. களிமண் மைதானத்தில் இவர் வெளிப்படுத்தும் சிறப்பான ஆட்டத்தால் இவருக்கு வந்த பெயர் இது.

13.வாழ்க்கையில் ஒரு முறை கூட தன்னுடைய டென்னிஸ் மட்டையை உடைத்ததே இல்லை. அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்.

14.நடால் இதுவரை  போட்டிகளில் வெற்றிப்பெற்று, அதற்கு பரிசாக வந்த தொகை மட்டுமே 17 மில்லியன் டாலர்கள் ஆகும்.

- தா. நந்திதா

(மாணவப்பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!