யூரோ 2016 கால் பந்து திருவிழாவுக்கு தயாராகும் ஃபிரான்ஸ்! | France preparing for Euro 2016

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (03/06/2016)

கடைசி தொடர்பு:16:21 (03/06/2016)

யூரோ 2016 கால் பந்து திருவிழாவுக்கு தயாராகும் ஃபிரான்ஸ்!

ஃபிரான்ஸ் நாட்டில், வரும் ஜூன் 10 ம் தேதி யூரோ கால்பந்துப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. முதல் முறையாக 24 நாடுகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஹென்றி தௌலாண்ட் என்பவர், 1927 ல் பி்ரான்ஸ் கால்பந்து சங்கத்தின் செயலாளராக இருந்தார். அவர்தான் இதற்கான ஐடியாவை கொடுத்தது முதல் பல்வேறு வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 1960 ல் யூரோ விளையாட்டு ஆரம்பிக்கும்போது அவர் இறந்து விட்டார். அதனால்  அவர் நினைவாகவே அந்த கோப்பைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது.

இந்தப் போட்டிகளில் ஒன்றுபட்ட சோவியத் யூனியன், முதல் கோப்பையை வென்றது.

இதுவரை நடந்துள்ள 14 இறுதிப் போட்டிகளில் ஜெர்மனி, ஸ்பெயின் 3 முறையும், பிரான்ஸ் 2 முறையும்  சோவியத் யூனியன், நெதர்லாந்து, செக்கஸ்லோவோகியா, டென்மார்க், கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகள்  ஒரு முறையும் இந்த கோப்பைகளை கைப்பற்றின.

வெள்ளியினால் ஆன இந்த கப்பின் எடை தற்போது 8 கிலோவாகவும், அகலம் 60 செ.மீ ஆகவும் உள்ளது.

போனமுறை போலந்து, உக்ரைன் சேர்ந்து நடத்திய இறுதிப் போட்டியை 30 கோடி மக்கள் பார்த்தார்கள்.இந்த முறை இன்னும் அதிகமான மக்கள் பார்வையாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால் போட்டியினை நடத்தும் நாடு, இறுதிச்சுற்றுக்கு  நேரடியாக தகுதி பெறும்.உலகக் கோப்பை போல அதற்கு முந்தையக் கோப்பையை வாங்கிய அணியும் தகுதிச் சுற்றில் சேர்ந்துதான் வரவேண்டும்..

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், ஃபிரான்சில் இந்த வாரமே குவியத் துவங்குவார்கள். ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை ஒரு மாத காலம் ஃபிரான்ஸ் நாட்டில் திருவிழா கொண்டாட்டம்தான்!


-சண்.சரவணக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்