பிரேசிலிலும் அட்டூழியம் : ஒலிம்பிக் டார்ச்சில் பங்கேற்ற சிறுத்தை சுட்டுக் கொலை!

பிரேசிலின் அடையாளங்களில் ஒன்றான, அமேசான் நதி ஓடும் அமேசான் மாகாணத்தில் உள்ள மென்னஸ் நகரில், ஒலிம்பிக் டார்ச் ஓட்டம் நடைபெற்றது. அமேசான் காட்டின் முக்கிய வன விலங்கு சிறுத்தை.  எனவே இந்த நிகழ்வில் ஜாகுவார் ஒன்று பங்கேற்றால் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும்விதமாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதினர். மென்னஸ் நகரில் உள்ள ராணுவ மையத்தில் இந்த நிகழ்வு நடந்தது.

எனவே அந்த ராணுவ மையத்துக்கு வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து ஜுமா என்ற  சிறுத்தை    கொண்டு வரப்பட்டது.  அதன் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு  நிகழ்ச்சி நடந்த இடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அதன் பராமரிப்பாளர் கையில் இருந்து தப்பிய ஜுமா, ராணுவ மையத்துக்குள் ஓடத் தொடங்கியது. இதனை பார்த்த ராணுவ வீரர் ஒருவர் ஜுமாவை சுட்டுக் கொன்று விட்டார்.

இந்த சம்பவம் வனவிலங்குகள் ஆர்வலர்களை கொதித்தெழ வைத்துள்ளது.  'இந்த நிகழ்வில் நான் பங்கேற்க வேண்டுமென்று சிறுத்தை  உங்களிடம் கேட்டதா?' என ஒலிம்பிக் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நீங்களே அதனை கொண்டு வந்து விட்டு பின்னர் சுட்டுக் கொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளனர்.

'நாங்கள் தவறிழைத்து விட்டோம்' என்று ஒலிம்பிக் லோக்கல் ஆர்கனைசிங் கமிட்டி தெரிவித்துள்ளது.இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில்,   உயிரியல் பூங்கா ஒன்றில் குழந்தையை காப்பாற்றுவதற்காக   அங்கு இருந்த ஹராம்பே சிம்பன்சி  சுட்டுக் கொல்லப்பட்டது,  வனவிலங்கு ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!