வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (10/07/2016)

கடைசி தொடர்பு:11:42 (11/07/2016)

பீலே மூன்றாவது திருமணம்

கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தற்போது 75 வயதாகிறது. ஏற்கெனவே பீலே செய்த இரண்டு திருமணமும் முறிந்து போனது. ரோஸ்மேரி ஜோல்பி என்ற முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உண்டு. இரண்டாவதாக அஸ்ரியா என்பவரை திருமணம் செய்தார். அந்த வகையில் இரு குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பீலே தந்தை.

இந்த நிலையில் 42 வயது மார்சியா சிப்லே அயோகி என்பவரை மூன்றாவது திருமணம் செய்து  கொண்டார். சாபோல நகரில் இருவரும் மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர்.  கடந்த 2010ம் ஆண்டு முதலே இருவரும் சேர்ந்து விழாக்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர்.  தனியாக சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

பிரேசில் அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் பீலே விளையாடியுள்ளார். அந்த அணியுடன் மூன்று முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளார். கால்பந்து வாழ்க்கையில் ஆயிரம் கோல்களுக்கு மேல்  அடித்துள்ள பீலே, சான்டோஸ், நியூயார்க்ஸ் காஸ்மோஸ் என இரு கிளப்புகளுக்காக விளையாடி இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்