வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (17/07/2016)

கடைசி தொடர்பு:16:19 (17/07/2016)

விஜேந்தர சிங் இந்தியாவின் 'ரியல்' சுல்தான்!

சிய பசிபிக் தொழில்முறை சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதற்கு முன் நடந்த 6 போட்டிகளில் நாக்அவுட்டில் எதிராளிகளை வீழ்த்தியிருந்தார் விஜேந்தர சிங், மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட இந்த மோதலில் தொடக்கம் முதலே விஜேந்தர சிங் தாக்குதல் ஆட்டத்தில் தீவிரம் காட்டினார்.

ஆனால் ஹேரி ஹோப்புக்கு அனுபவம் கை கொடுத்தது. அதனால் தற்காப்பில்தான் அவர் பெரும்பாலும் ஈடுபட்டார். 10 சுற்றுக்கள் வரை போட்டி போனதால் விஜேந்தர சிங் வெற்றிக்காக கடுமையாக போரட வேண்டியது இருந்தது. களைத்து போயிருந்தாலும் சளைக்கவிவ்லை. அந்த போராட்டமே விஜேந்தர் சிங்கை 98-92, 98-92, 100-90 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற வைத்தது.

தொழில்முறை குத்துச்சண்டை வீரராக உருவெடுத்த பிறகு தொடர்ச்சியாக 7வது வெற்றியைப் பெற்றுள்ளார் விஜேந்தர் சிங். அதேநேரத்தில், இதற்கு முன்னர் விளையாடிய 6 போட்டிகளுமே நாக் அவுட் வெற்றி. போட்டி முடிவை நடுவர் அறிவிப்பதற்கு முன்னதாகவே அவரது பயிற்சியாளர் லீபியார்ட்,  விஜேந்தரை தலைக்கு மேல் தூக்கி வெற்றியைக் கொண்டாடினார்.

வெற்றி குறித்துப் பேசிய விஜேந்தர் சிங், "இப்போது இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டு பற்றி அதிகம் பேர் பேசத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக மீடியாக்களுக்கு நன்றி. ஆனால் இன்னும் நமது நாட்டில் ஒரு உருப்படியான பாக்சிங் ரிங் இல்லை.

ஒரு குத்துச்சண்டை அகாடமி கூட கிடையாது. பலமுறை இது தொடர்பா விளையாட்டுத்துறை அமைச்சகத்திடமும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடமும் பேசினேன், ஆனாலும்.உருப்படியான ஒரு பயனும் இல்லை"  என்றார் வருத்ததுடன்.

வெற்றியை தொடர்ந்து விஜேந்திரசிங்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தேசத்தை பெருமைப்பட வைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர் உங்களது மகத்தான உழைப்புக்கும் ஸ்டெமினாவுக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குத்துச்சண்டை போட்டியை முழுவதுமாக இருந்து ரசித்துள்ளேன். இந்தியாவை பெருமைப்பட வைத்துள்ளீர்கள். இது தொடக்கம்தான் உங்களது உழைப்பு அர்ப்பணிப்பு உணர்வுக்கு கிடைத்த வெற்றி  என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளர்

விஜேந்திர சிங் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் மிடில் வெயிட்டில் வெண்கலம் வென்றவர். 2010 ஆம் ஆண்டு குவாங்சு ஆசியப் போட்டியில் தங்க வென்நிருந்தார்.  பின்னர் இந்திய குத்துச்சண்டடை அமைப்பு சரியான ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தினால் தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறி விட்டார்.

தொழில்முறை குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி இல்லையென்பதால், ரியோ ஒலிம்பிக்கில் விஜேந்திர சிங் பங்கேற்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு பதக்க இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்