ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய டி லாமாவுக்குள் மறைந்திருக்கும் சோகம்! | The inspiring reason Olympic marathoner Vanderlei Cordeiro de Lima lit the Olympic cauldron

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (06/08/2016)

கடைசி தொடர்பு:17:07 (09/08/2016)

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய டி லாமாவுக்குள் மறைந்திருக்கும் சோகம்!

ரியோ ஒலிம்பிக் போட்டியில், கால்பந்து ஜாம்பாவன் பீலேவுக்குப் பதிலாக ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் மாரத்தான் வீரர் கார்டிரோ டி லாமா ஏற்றி வைத்தார்.

 

இந்த கஸ்டாவோ, பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியன். ரஃபேல் நடாலுக்கு முன்னர் களிமண் தரையில் கட்ஸோவாதான் அசைக்க முடியாதவராக வலம் வந்தார். .கடந்த  1997, 2000, 2001ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றவர். 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் மற்றும் 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடர்களில் பிரேசில் டென்னிஸ் அணியில் இடம் பெற்றிருந்தார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 2000ம் ஆண்டில் 43 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். டென்னிஸ் வாழ்க்கையில் 28 பட்டங்களை வென்றுள்ளார். அதில் 20 ஒற்றையர் பட்டங்களும் 8 இரட்டையர் பட்டங்களும் அடங்கும். கடந்த 2012ம் ஆண்டு 39 வயது கஸ்டோவா சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால்  ஹால் ஆப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். இந்த பெருமையை  பெற்ற முதல் பிரேசில் டென்னிஸ் வீரர் இவர்தான்.

ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் மாரத்தான் வீரர் கார்டிரோ டி லாமா ஏற்றி வைத்தார். கடைசி நேரத்தில், பீலே உடல் நலக் கோளாறு காரணமாக ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதால்,  அவருக்கு பதிலாக டி லாமாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

                                      

விளையாட்டு உலகில் பீலே போல டி லாமா அறியப்பட்டவர் இல்லை. ஆனால் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி லாமா சந்தித்த இடையூறு மட்டும்  வெகு பிரபலம்.  ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மீட்டர் மாரத்தானில் தங்க பதக்கத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் டி லாமா. முதல் 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு  அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். அப்போதுதான் அந்த இடையூறு நிகழ்கிறது.

மது அருந்திய  பார்வையாளர் ஒருவர், டி லாமாவின் குறுக்கே புகுந்து தடுத்து அவரை கரையில் தள்ளுகிறார். இதன் காரணைமாக அவரால், தொடர்ந்து 30 விநாடிகள் வரை ஓட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் டி லாமாவின் தங்கக் கனவு பறி போனது. முடிவில் 2  மணிநேரம் 12 நிமிடம் 11 விநாடிகளில் இலக்கினை கடந்த அவரால், வெண்கலப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது. முதலிடத்தை பிடித்த இத்தாலி வீரர் 2 : 10: 55 விநாடிகளிலும் 2வது இடத்தை பிடித்த அமெரிக்க வீரர் 2:11:29 விநாடிகளிலும் இலக்கை கடந்தனர்.

மறுபடியும் இந்த  போட்டி நடத்த வேண்டுமென பிரேசில் கோரிக்கை விடுத்தது. ஆனால் பயன் இல்லை. எனினும் 'ஸ்பிரிட் ஆப் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் 'விருதை வழங்கி அப்போது டி லாமாவை கௌரவித்தது ஒலிம்பிக் கவுன்சில்.

மது அருந்திய ஒருவரால், ஒரு வீரரின் ஒலிம்பிக் கனவே பாழகிப்போனது. அப்போது உலகமே டி லாமாவுக்காக பரிதாபப்பட்டது. அந்த மனக் காயத்தை ஆற்றும் வகையில், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்கும் பெருமை கிடைத்துள்ளது இப்போது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்