ரியோ ஒலிம்பிக்: தோனி ஸ்டைலில் நிருபருக்கு பதிலளித்து வைரலான ஆன்டி முர்ரே! | Rio Olympic: Andy murray did the same what dhoni did to the Reporter

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (16/08/2016)

கடைசி தொடர்பு:11:08 (18/08/2016)

ரியோ ஒலிம்பிக்: தோனி ஸ்டைலில் நிருபருக்கு பதிலளித்து வைரலான ஆன்டி முர்ரே!


ரியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் டெல்  பெட்ரோவை எதிர்கொண்ட பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அபாரமாக ஆடி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். லண்டன் ஒலிம்பிக்கிலும் இவர் தான் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு பிறகு அவரை பேட்டியெடுத்த பி.பி.சி நிருபர் ஜான் இன்வெர்டேல், முர்ரேயிடம் ஒலிம்பிக் போட்டிகளில் டென்னிஸில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் மனிதர் நீங்கள்தான். இது மிகப்பெரிய சாதனைதானே எனக் கேட்டார். அதற்கு முர்ரே, “ஏற்கனவே வீனஸ், செரீனா 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர் என நினைக்கிறேன். ஒற்றையர் பிரிவில்தான் யாரும் தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை” என்று நேர்த்தியாக பதிலளித்தார். 

இந்த பேட்டி, சமுக வலைத்தளங்களில் வைரலானது. முர்ரேவின் பதிலை அனைவரும் பாராட்டினர். 'பெண்களும் மனிதர்களே. அவர்களை அலட்சியப்படுத்துவது தவறு, என அந்த நிருபருக்கு எதிராக  கோபத்தை வெளிப்படுத்துகின்றனர் சமூக வலைத்தளங்களில். சமீபத்தில்  இவரது கேள்விகளால் கடுப்பாகி நேரடி ஒளிபரப்பின்போது பிரிட்டனின் முன்னாள் படகோட்டும் வீரர் சார் ஸ்டீவ் ரெட்கிரேவ்  வெளியேறினார். ஆன்டி முர்ரேயின் இந்த பதில் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி  தோற்றபோது தோனி அளித்த பேட்டியோடு ஒப்பிட்டும் சமூக வலைதளங்களில் நிருபரை விமர்சித்து வருகின்றனர்.  

 
- ம.காசி விஸ்வநாதன்

(மாணவப் பத்திரிகையாளர்)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்