இந்தியர்களிடம் விஜேந்திர சிங் முன்வைக்கும்' ஒலிம்பிக் ' கேள்விகள்! | Question raises by Vijender Singh about 'Olympic'

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (19/08/2016)

கடைசி தொடர்பு:17:58 (19/08/2016)

இந்தியர்களிடம் விஜேந்திர சிங் முன்வைக்கும்' ஒலிம்பிக் ' கேள்விகள்!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் நடைபெறும் சமயத்தில்தான் நாங்கள் உங்கள் கண்ணுக்குத் தெரிவோமா என குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் கேள்வி எழுப்பியுள்ளார். 

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு பதக்கம் வென்றுள்ளது. மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்று தந்துள்ளார். தற்போது சிந்துவும் பேட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.

அண்மையில் பிரபல எழுத்தாளர் ஷோபா டே... இந்திய வீரர்களை கிண்டலடித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், ''இந்தியர்கள் பணத்தையும் வாய்ப்பையும் வீணடிக்கின்றனர். ரியோவை சுற்றிப் பார்த்து செல்ஃபி எடுத்து கொண்டு வருவார்கள்'' என குறை கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் இந்தியர்களிடம் ஒலிம்பிக்கை மையமாக வைத்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

விஜேந்திர சிங் முன் வைத்துள்ள கேள்விகள் இதுதான்...

1) எத்தனை இந்திய நடிகர்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர். அவர்களிடம் நீங்கள் இது குறித்து கேள்வி எழுப்பினீர்களா? 

2) எத்தனை எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொருளாதார நிபுணர்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்?

3) எத்தனை பாடகர்கள், இசையமைப்பாளர்கள் கிராமி விருது வென்றுள்ளனர்?

4) ஐ.நா. பொதுச்செயலாளர் பதவியை எத்தனை இந்தியர்கள் வகித்துள்ளனர்?

''மேற்கண்ட யாரிடம் எந்த கேள்வியையும் கேட்காத நீங்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் நடைபெறும் போது மட்டும், விளையாட்டு வீரர்களிடம் எத்தனை பதக்கம் வாங்கினீர்கள் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்?. ஒலிம்பிக் முடிந்ததும் நீங்கள் எங்களை  மறந்து விடுவீர்கள் என காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த விஜேந்திர சிங், 2008ம் ஆண்டு  பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் மிடில்வெயிட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். தற்போது தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் இறங்கி வெற்றிகளை குவித்து வருகிறார்.

                                                                                                                               - எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்