தாயகம் திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

நேற்று இரவுடன் ரியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுற்றது.2020-ல் ஜப்பானின் டோக்கியோவில், அடுத்த ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. ரியோ ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளிப்பதக்கமும், ஒரு வெண்கலப்பதக்கமும் இந்தியா கைப்பற்றியது. 

பேட்மின்டன் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து. இன்று காலை ஐதராபாத் விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அமைச்சர்கள்,மீடியா, ரசிகர்கள் என பலதரப்பட்ட மக்கள் சிந்துவின் வருகைக்காக காத்திருந்தனர்.

 

பயிற்சியாளர் கோபிசந்துடன், டபுள்-டெக்கர் திறந்தவெளி வாகனத்தில் பயணம் செய்தார் பி.சி.சிந்து. மும்பையிலிருந்து, இந்த வாகனத்தை தெலுங்கானா அரசு சிந்துவின் வருகைக்காக வரவழைத்து இருந்தனர்.கச்சிபவுல் மைதானத்தில், மாணவர்கள் முன்னிலையில், அவருக்கு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. தெலுங்கானா அரசு சிந்துவுக்கு 5 கோடி ரூபாயும், ஆந்திர பிரதேச அரசு 3 கோடி ரூபாயும் பரிசளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!