தீபா, சிந்து, சாக்ஷி, கோபிக்கு சச்சின் அளித்த பரிசு!

லிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா, சிந்து, சாக்ஷி, கோபிசந்த் ஆகியோருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பி.எம். டபிள்யூ கார் வழங்கினார்.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சரித்திரம் படைத்த பி.வி.சிந்து (பேட்மிண்டன்), சாக்‌ஷி மாலிக் (மல்யுத்தம்), மயிரிழையில் பதக்கத்தை நழுவவிட்ட தீபா கர்மகருக்கு (ஜிம்னாஸ்டிக்ஸ்) கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டும், பரிசுகள் வழங்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், அவர்களை கவுரவிக்கும் விதமாக ஹைதராபாத் நகரில் இன்று மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வீராங்கனைகளும், பி.வி.சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்தும் மேடையில் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.


கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் பல்வேறு விளையாட்டுத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த விழாவில், ஒலிம்பிக் வீராங்கனைகள் மூவருக்கும் விலையுயர்ந்த (BMW) கார்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கும் (BMW) கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த கார்கள் ஸ்பான்சர்ஷிப்பாக வழங்கப்பட்டாலும், இதில் முக்கிய ஸ்பான்சராக சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

மேலும், சச்சினின் பரம ரசிகையான சாக்‌ஷி மலிக், இந்தவிழாவில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த டெண்டுல்கருக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். 'என்னுடைய சகோதரராக நான் அன்பு வைத்துள்ள அவருடன் நானும் என் குடும்பத்தாரும் இணைந்து நின்று செல்ஃபி எடுத்துகொள்ள சச்சின் அனுமதிக்க வேண்டும்' என விழா மேடையில் இருந்த ஒலிபெருக்கி மூலம் சாக்‌ஷி மலிக் தனது விருப்பத்தை கோரிக்கையாக டெண்டுல்கருக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து, விழா மேடைக்கு வந்த சச்சின் டெண்டுல்கர், சாக்‌ஷி மலிக் மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து நின்று செல்ஃபி எடுத்து கொண்டார். இதேபோல், பி.வி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த், தீபா கர்மகர் ஆகியோருடனும் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த டெண்டுல்கர், அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!