இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி திணறல்

இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 455 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கோலி 167 ரன்கள் எடுத்தார். புஜாரா 119, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அந்த அணியின் குக்,மொய்ன் அலி, பென் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  இரண்டாம் நாள் ஆட்ட நேர  முடிவில் இங்கிலாந்து அணி  5 விக்கெட்டுகள் இழப்புகளுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமி, ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!