வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (21/11/2016)

கடைசி தொடர்பு:17:33 (21/11/2016)

முதல் ஏ.டி.பி பட்டத்தை வென்றார் முர்ரே!

லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி டென்னிஸ் இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரிட்டனின் ஆண்டி முர்ரே. இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் முர்ரே. இறுதிப் போட்டியில் 6-3, 6-4, என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல் முறையாக ஏடிபி பட்டத்தை வென்றுள்ளார் முர்ரே .

இது பற்றி முர்ரே கூறுகையில், 'இன்று வெற்றி பெற்று, உலக அளவில் முதலிடத்தில் நீடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான்' என்று கூறியுள்ளார்.

போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி ஜோகோவிச் கூறுகையில், 'ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் நான் சரியாக விளையாடவில்லை. முர்ரே நன்றாக விளையாடினார். வெற்றி பெறுவதற்கான முழுத் தகுதியும் அவருக்கு இருக்கிறது. கண்டிப்பாக முர்ரே தான் உலகின் நம்பர் 1 வீரர்' என்று புகழாரம் சூட்டினார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க