வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (21/11/2016)

கடைசி தொடர்பு:10:22 (22/11/2016)

U-20 கால்பந்து உலக கோப்பையை நடந்த இந்தியா ஆர்வம்

2019ல் நடக்கவுள்ள 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதுகுறித்து அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ப்ரஃபுல் படேல் FIFA-விடம் இந்தியாவின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.


'FIFA-வின் போட்டிகளுக்கான குழுவிடம், 2019ல் உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதில் எங்கள் ஆர்வத்தைப் பற்றி கூறியுள்ளோம். 2017ல் U-17 கால்பந்து உலக கோப்பை போட்டியை நடத்தும் அனுபவம் அடுத்து வரும் போட்டிக்கு கைகொடுக்கும்.' என்று கூறியுள்ளார் ப்ரஃபுல் படேல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க