வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (22/11/2016)

கடைசி தொடர்பு:15:55 (22/11/2016)

'கிங் பேர்' ஆண்டர்சன்..! சேவாக் கிண்டல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக ட்வீட் செய்து மற்ற விளையாட்டு வீரர்களை கிண்டல் செய்வது வழக்கம். இந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிக்கிக் கொண்டார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 'கிங் பேர்' எடுத்து அவுட்டானர். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும், தான் விளையாடும் முதல் பந்துகளில் அவுட் ஆனால் அது கிங் பேர் எனப்படும்.

2011ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது ஒரு டெஸ்ட் போட்டியில் கிங் பேர் எடுத்தார் சேவாக். இரண்டு முறையுமே சேவாக்கை அவுட் செய்து வெளியேற்றிது ஆண்டர்சன் தான்.

இது பற்றி சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில்,'2011ல் என்னை கிங் பேரில் வெளியேற்றி ஆர்யபட்டாவுக்கு மரியாதை செலுத்தச் செய்தார் ஜிம்மி ஆண்டர்சன். இன்று, அவருக்கும் கிங் பேர் கிடைத்திருக்கிறது.' என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டுக்கு ஆண்டர்சனும் பதில் ட்வீட் செய்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க