மாரடோனா இந்தியா வருகை

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் டியகோ மாரடோனா, டிசம்பர் 12 ஆம் தேதி நாகாலாந்துக்கு வருகிறார். நாகாலந்தின் தலைநகரமான கொஹிமாவுக்கு வரும் அவர், 16 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் அணியில் சேர்ந்து ஒரு போட்டியில் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. 


நாகாலந்தின் முதல்வர் டி.ஆர். சிலியாங் மாரடோனாவுக்கு கவுரவ விருந்தளிப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாரடோனா எவ்வளவு நாள் இந்தியாவில் தங்குவார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை.


அர்ஜென்டினா அணி 1986 ஆம் ஆண்டு உலக கோப்பையில் வெற்றி பெற்ற போது, மாரடோனா அந்த அணியின் ஸ்டார் விளையாட்டு வீரராக  இருந்தார். இதற்கு முன்பு 2008 மற்றும் 2012ல் மாரடோனா இந்தியா வந்துள்ளார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!