இந்திய மகளிர் அணி இப்போ ஆசிய சாம்பியன்! | Indian wins Pakistan at Asian Trophy T20 Final

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (04/12/2016)

கடைசி தொடர்பு:16:50 (04/12/2016)

இந்திய மகளிர் அணி இப்போ ஆசிய சாம்பியன்!

மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஏக்டா பிஷ்ட் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய சாம்பியனானது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க