வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (18/12/2016)

கடைசி தொடர்பு:07:19 (18/12/2016)

'தோனி கேப்டனாக தொடர வேண்டும் ' - கபில்தேவ்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், 'டெஸ்ட் கேப்டனாக கோலி சிறப்பாக செயல்படுகிறார். சரியான காலம் வரும் போது அவரிடம் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம். ஆனால், தற்போது தோனி ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். அவர் அனுபவம் வாய்ந்தவரும் கூட. எனவே, அவர் கேப்டனாக தொடர வேண்டும். நேரம் வரும்போது தோனியே அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவார். கோலி களத்தில் உணர்ச்சிவசத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால், தோனி அமைதியாக செயல்படுகிறார். ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதம். இருவரது அணிகளும் வேறு மாதிரியானது. எனவே, அவர்கள் இருவரையும் ஒப்பிட முடியாது' என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க