முதல் சதமே இரட்டை சதம்- அசத்திய 3வது இந்திய வீரர் | Karun Nair reaches double-ton in style

வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (19/12/2016)

கடைசி தொடர்பு:16:07 (19/12/2016)

முதல் சதமே இரட்டை சதம்- அசத்திய 3வது இந்திய வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் கருண் நாயர் இரட்டை சதம் விளாசியுள்ளார். முதல் சதத்தையே இரட்டை சதமாக அடித்தவர்கள் பட்டியலில் 3வது இந்திய வீரர் இவர் ஆவார்.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அலி 146 ரன்னும், ரூட் 88 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிஸ்சை தொடர்ந்தது. தொடக்க வீரராக ராகுலும், பாட்டீலும் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் குவித்தது. அரை சதம் அடித்த பாட்டீல் 71 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த புராஜா 16 ரன்னிலும், கோலி 15 ரன்னிலும் வெளியேறினர். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய கருண் நாயர், ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 162 ரன்கள் எடுத்தது.

இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 199 ரன்னில் ராகுல் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அசத்தி வந்த கருண் நாயர், இரட்டை சதம் விளாசினார். தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் 3வது நபராக இடம் பிடித்துள்ளார். 2 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள கருண் நாயர், அதிகபட்சமாக 13 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தற்போது, இரட்டை சதம் அடித்து விளாசியுள்ளார்.

முரளி விஜய் 29 ரன்னிலும், அஸ்வின் 67 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தற்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 620 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 218 ரன்னிலும், ஜடேஜா 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க