கருண் நாயரின் பேட்டை கவனித்தீர்களா?

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், ஐந்தாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து முடிந்துள்ளது. இதன் நான்காம் நாளான நேற்று இந்தியாவின் கருண் நாயர் அபாரமாக விளையாடி முச்சதம் விளாசினார். ஏற்கெனவே ஒரு ரன்னில் தன் இரட்டை சதத்தைத் தவற விட்ட கே.எல். ராகுல் அனைவரின் கவனத்தையும் தன் அதிரடி ஆட்டத்தால் கவர்ந்தார். இந்நிலையில் தற்போது அனைவரின் பார்வையும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கருண் நாயரின் மேல் விழுந்துள்ளது.

தன் அபார ஆட்டத்தால் முச்சதம் விளாசிய கருண் நாயரின் பேட் இந்திய வீரர்கள், பயன்படுத்தும் பேட்களில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தது. இந்த " க்ரே நிகோல்ஸ்"(Gray Nicols) பேட்டை அதிகளவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் உபயோகப்படுத்துவார்கள். அது எப்படி நம் வீரரின் கையில் வந்தது என்று வரலாற்றை பார்க்கும்போது, 40 ஆண்டுகள் கழித்து உலகிலேயே பழமையான இந்த பேட் நிறுவனம் மீண்டும் இந்தியா பக்கம் கால் பதித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.


 

40 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மனாக ஜொலித்த சுனில் கவாஸ்கர் இந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தார் எனவும், அதன் பிறகு கருண் நாயருக்கு இந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளாக கருண் நாயரின் ஆட்டத்தை ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கவனித்து வந்த க்ரே நிகோலஸ் நிறுவனம், இந்திய அணியுடனான ஒப்பந்தத்தை நைக் நிறுவனம் கைவிட்டதையடுத்து, தங்கள் முத்திரையை பதிக்க இருக்கிறது . ஆக, க்ரே நிகோலஸ் நிறுவனத்தில் ஒப்பந்தமிட்டு அந்த நிறுவனத்தின் பேட்டை. உபயோகிக்கும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமைக்குரியவர் கருண் நாயர். ஆல் தி பெஸ்ட் கருண்.

-உசுதர்சன் காந்தி ( மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!