வார்னரின் அசத்தல் வரலாற்றுச் சாதனை..!

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 78 பந்துகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டி ஒன்றில் உணவு இடைவேளைக்கு முன்பு அதிவேக சதம் விளாசி சாதனை புரிந்துள்ள முதல் வீரர் வார்னர்தான். இதுவரை டெஸ்ட் போட்டி வரலாற்றிலேயே 5 பேர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். 1976-ம் ஆண்டுக்குப் பிறகு, 41 ஆண்டுகள் கழித்து வார்னர்தான் முதன்முறையாக இந்த சாதனையை தனதாக்கி உள்ளார். 

அவர், 3-வது டெஸ்ட்டின் முதல் நாள் முதல் செஷனில், 78 பந்துகளில் சதம் அடித்த போது இந்த சாதனையை நிகழ்த்தினார். 95 பந்துகளில் 113 ரன்கள் எடுத்திருந்த போது வார்னர் தனது விக்கெட்டை இழந்தார். 

முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய ஆணி 365/3 என்ற நிலையில் தொடர்ந்து ஆடி வருகிறது. 

இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டீன் எல்கர், டீ காக், டேவிட் வார்னர் மற்றும் மேத்யூ ரென்ஷா ஆகிய நான்கு பேர் சதம் அடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!