வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (05/01/2017)

கடைசி தொடர்பு:16:43 (05/01/2017)

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் வெளியேறியது தமிழகம்

ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழக அணியை மும்பை அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வந்தது. இதில் மும்பை-தமிழகம் அணிகள் மோதின. இரண்டு இன்னிங்ஸ் முடிவில், மும்பைக்கு 251 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தமிழகம். இதையடுத்து களமிறங்கிய மும்பை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் ப்ரித்திவ் ஷா 120 ரன்கள் எடுத்தார்.  இந்த வெற்றி மூலம் மும்பை அணி ரஞ்சிக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 10-ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மும்பை-குஜராத் அணிகள் மோதுகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க