முர்ரேவின் சாதனைக்கு முடக்குப் போட்ட ஜோகோவிச்!

Novak Djokovic

கதார் ஓபனின் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் வென்றுள்ளார். இதன் மூலம், கடந்த 28 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த முர்ரேவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜோகோவிச். 6-3, 5-7, 6-4 என்ற செட்களில் முர்ரேவை ஜோகோவிச் வீழ்த்தினார். 

இந்த வெற்றிக்கு பின்பும் உலக டென்னிஸ் தரவரிசையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்டி முர்ரே தொடர்ந்து முதல் இடத்திலும், செர்பிய நாட்டைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். 

'முர்ரேவுடன் விளையாடும் போது முடிவு எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஆகையால் இந்தப் போட்டி 3 செட்களுக்கு மூன்று மணி நேரம் நீண்டது எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை.' என்று வெற்றி பெற்ற ஜோகோவிச் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!