கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு கொலை மிரட்டல்..! | death threat to Sourav Ganguly

வெளியிடப்பட்ட நேரம்: 23:23 (09/01/2017)

கடைசி தொடர்பு:10:38 (10/01/2017)

கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு கொலை மிரட்டல்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு கடிதத்தின் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 13 -ம் தேதி கங்குலி மேற்கு வங்கத்தில் இருக்கும் மித்நாபூர் நகருக்குச் செல்ல இருக்கிறார். இந்நிலையில் அவர் அங்கு வருவது தெரிந்து அவருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் அவர் மித்நாபூர் நகருக்கு வந்தால் உயிருடன் திரும்பமாட்டார் என்று எழுதப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு கொலை மிரட்டல்..!

இது குறித்து கங்குலி கூறுகையில், 'மித்நாபூர் நகரில் இருக்கும் பித்தியாசாகர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் எனக்கு அந்த கொலை மிரட்டல் கடிதம் வந்தது. இது குறித்து காவல் துறைக்கு முறையாகப் புகார் அளித்துள்ளேன்'. என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close