வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (10/01/2017)

கடைசி தொடர்பு:11:45 (10/01/2017)

ஜோ ரூட்டின் 'All Time XI'-ல் சச்சின், கோஹ்லி..!

Joe Root all time 11

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட், தனக்குப் பிடித்த முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்களை வைத்து 11 பேர் கொண்ட அணிப் பட்டியலை (All Time XI) உருவாக்கியுள்ளார். இதில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். 

பிரபலமான கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடித்த 11 பேர் கொண்ட பட்டியலை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.சி.சி கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club). அதேபோல, பிரபல வீரர்களை வைத்து உருவாக்கப்படும் பட்டியலை எம்.சி.சி கிரிக்கெட் கிளப் அவர்களின் யூ-டியூப்பில் வெளியிட்டும் வருகிறார்கள்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க