இந்திய அணிக்கு புது ஜெர்சி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு, ஒரு நாள் போட்டிக்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர். அடுத்து நடக்க இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்த ஜெர்சியுடன் இந்திய அணி களத்தில் இறங்க உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஜெர்சியை, கடுமையான வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தயாரித்துள்ளதாம் நைக் நிறுவனம். இதையடுத்து தோனி, கோஹ்லி, அஸ்வின், ரஹானே மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீட், மிதாலி ராஜ் உள்ளிட்ட வீராங்கனைகள் புது ஜெர்சியுடன் எடுத்த போட்டோ ஒன்றை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

India team new jersey

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி வருகின்ற 15-ம் தேதி நடக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!