வெளியிடப்பட்ட நேரம்: 05:24 (20/01/2017)

கடைசி தொடர்பு:10:20 (20/01/2017)

ஆஸி. ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

 

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னாள் நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,  போட்டியின் 4-வது நாளான நேற்று 2-வது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.  


ஜோகோவிச்டுக்கு ‘வைல்டுகார்டு’ மூலம் தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்தோமின் இந்த அதிர்ச்சியை அளித்தார்.  4 மணி 48 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் இஸ்தோமின் 7-6 (10-8), 5-7, 2-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வெளியேற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க