வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (24/01/2017)

கடைசி தொடர்பு:17:49 (26/01/2017)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஃபெடரர்

Roger Federer

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் மிஸ்சா ஸ்வெரேவ் மோதினர். இதில் ஃபெடரர் 6-1, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அவர் சக நாட்டு வீரரான வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார். 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி சுற்றுக்கு செல்வது இது 13-வது முறையாகும். ஃபெடரரிடம் தோல்வியடைந்துள்ள ஸ்வெரேவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகின் நம்பர் 1 வீரர் முர்ரேவை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க