வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (27/01/2017)

கடைசி தொடர்பு:20:06 (27/01/2017)

ஆஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் இறுதியில் நடால் - ஃபெடரர் பலப்பரீட்சை..!!

nadal

நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பரிவு இறுதிப்போட்டிக்கு ரஃபேல் நடால் முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவை 6-3, 5-7,  7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் நடால். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் போராடி வெற்றி பெற்றார் அவர். நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் ஃபெடரருடன் மோதுகிறார் நடால். இவ்விரு டென்னிஸ் ஜாம்பவான்கள் மோதும் இறுதிப் போட்டி டென்னிஸ் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க