“6 பந்துகள் 6 விக்கெட்”- அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

படம்: (Source: Golden Point CC/twitter)

நாம் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் டாட் செய்து பார்த்திருப்போம், ஆறு பந்துகளிலும் நான்கு ரன்கள் அடித்துப் பார்த்திருப்போம், ஏன்? ஆறு பந்துகளிலும் 6 ரன்கள் அடித்துக்கூட பார்த்திருப்போம். ஆனால் ஆறு பந்துகளில் ஆறு விக்கெட் எடுத்து பார்த்துள்ளீர்களா? ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த அலெட் கரெ (Aled Carey) அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஆறு பந்துகளில் தொடர்ந்து ஆறு விக்கெட்களை வீழ்த்தி இரட்டை ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடந்த பல்லாரட் கிரிக்கெட் அமைப்பு நடத்திய போட்டியில் கோல்டன் பாய்ன்ட் கிரிக்கெட் கிளப் சார்பாக அலெட் கரெ விளையாடினார். அந்த ஆட்டத்தில் கிழக்கு பல்லாரட் அணியுடன் இந்த அணி மோதியது. 40 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் பந்து அலெட் கரெயிடன் கொடுக்கப்பட்டது. யாருமெ எதிர்பார்த்திராத வகையில் அவர் ஆறு பந்துகளில் எதிரணியின் ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச அரங்கில் யாரும் ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்கள் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறுகையில்,”நான் இன்னும் அதிர்ச்சியில்தான் உள்ளேன். இந்த நாள் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள் என்றே நினைக்கிறேன். இதை என்னால் மறுபடியும் நிகழ்த்த முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை” என்று கூறினார்.

முரளி.சு
மாணவப் பத்திரிகையாளர்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!