வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (29/01/2017)

கடைசி தொடர்பு:17:54 (29/01/2017)

ஆஸ்திரேலியன் ஓபனில் நடாலை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஃபெடரர்.!!

federer

ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3  என்ற செட் கணக்கில் நடாலை வென்றுள்ளார் ஃபெடரர். இருவரும் 2-2 செட்களை கைப்பற்றவே 5-வது செட்டில் அரங்கமே நுனி சீட்டுக்கு வந்தது. இறுதி செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், நடாலை திக்குமுக்காட வைத்தார். இது ரோஜர் ஃபெடரரின் 18-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க