வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (02/02/2017)

கடைசி தொடர்பு:21:31 (02/02/2017)

டி-20 தரவரிசையில் சஹால் 92 இடங்கள் முன்னேற்றம்

 

Chahal

ஐசிசி தரவரிசை பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் வெற்றி மூலம் இந்திய அணி தரவரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. கேப்டன் கோஹ்லி டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். கோஹ்லி டெஸ்ட் பேட்டிங்கில் 2-வது இடத்திலும், ஒருநாள் போட்டியில் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் மூன்று விதமான கிரிக்கெட்களிலும், தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் ஒரே வீரர் கோஹ்லிதான்.

இந்நிலையில் நேற்றைய டி-20 போட்டியின் ஹீரோவான சஹால் 92 இடங்கள் முன்னேறி, பவுலிங்கில் 86-வது இடத்தில் உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க