வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (10/02/2017)

கடைசி தொடர்பு:12:52 (10/02/2017)

#CricketUpdates: சேவாக் சாதனை முறியடிப்பு; கோஹ்லி இரட்டை சதம்!

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இதில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் கோஹ்லி இரட்டை சதமடித்தார். அவர் 204 ரன்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி தொடர்ச்சியாக நான்கு தொடர்களில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

Kohli

சற்றுமுன் வரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்துள்ளது. சஹா 14, அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மேலும், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் கோஹ்லி படைத்துள்ளார். இதன்மூலம் சேவாக்கின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க