'இதுதான் ஆஸ்திரேலியாவின் பலவீனமான அணி' - ஹர்பஜன்சிங்

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் 23-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் ஹர்பஜன்சிங், 'நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல போட்டிகளில் விளையாடி உள்ளேன். தற்போது, வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணிதான், இதுவரை இந்தியா வந்ததில் மிகவும் பலவீனமான அணி. அவர்களால் தற்போதைய இந்திய அணியை, இந்த சூழலில் எதிர்கொள்ள முடியாது.

Harbhajan singh

அந்த அணியில் வார்னர், ஸ்மித் போன்ற வீரர்கள் மட்டுமே பேட்டிங்கில் சோபிக்கக் கூடியவர்கள். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இவர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். இந்த தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் இந்தியா வெல்லும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!