வெளியிடப்பட்ட நேரம்: 06:58 (20/02/2017)

கடைசி தொடர்பு:10:24 (20/02/2017)

பள்ளிகளில் கட்டாயம் ஆகிறது விளையாட்டு!

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு  கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான கல்வித்திட்டம் வரும் கல்வி ஆண்டில் வெளியிடப்படும். இனி வரும் காலங்களில், விளையாட்டில் எடுக்கப்படும் மதிப்பெண்களும் தேர்வின்போது கணக்கில் எடுக்கப்படும். இதுகுறித்து விளையாட்டுத்துறைச் செயலர் இன்ஜெட்டி சீனிவாஸ் கூறுகையில், "இந்தத் திட்டம், அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். இது, நம் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை  நிச்சயமாகக் கொண்டுவரும்`` என்றார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க