இந்தியாவுக்குப் பெருமைசேர்த்துள்ள துப்பாக்கி வீராங்கனை, பூஜா கட்கர்! 

இந்தியத் துப்பாக்கி வீராங்கனை பூஜா கட்கர்,  ISSF உலகக் கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவுக்குப் பெருமைசேர்த்துள்ளார். 

Pooja Ghatkar

டெல்லியில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பைப் போட்டிகளில்,  பெண்களுக்கான  10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில்,  பூஜா கட்கர் 228.8 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.  இந்தப் போட்டியில், முதல் இரண்டு இடங்களை சீன வீராங்கனைகள் பிடித்தனர்.  பூஜா, ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த 2014-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!