துணை கலெக்டர் ஆகிறார் பி.வி.சிந்து!

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள் மாறி, மாறி பரிசுகளை வழங்கி வந்தன. தெலுங்கானா அரசு அவருக்கு ரூ.5 கோடியும், ஃபிளாட் ஒன்றையும் வழங்கி இருந்தது.

PV. Sindhu

அதேபோல், ஆந்திர அரசு அவருக்கு ரூ.3 கோடி வழங்கி இருந்தது. மேலும், ஆந்திர அரசு சிந்துவுக்கு, குரூப்-1 அரசுப் பணியை வழங்கியது. இந்தப் பணியை சிந்து தற்போது ஏற்றுள்ளார். இதன் மூலம் சிந்து துணை கலெக்டர் ஆகி உள்ளார். இந்தத் தகவலை, சிந்துவின் தாயார் விஜயா கூறியுள்ளார்.

குரூப்-1 பிரிவில் பல்வேறு பணிகள் இருந்தாலும், அவர் துணைக் கலெக்டர் பதவியைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!