வெளியிடப்பட்ட நேரம்: 22:02 (24/02/2017)

கடைசி தொடர்பு:22:01 (24/02/2017)

இரட்டை சதமும். சச்சினின் உறக்கமில்லா இரவும்!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, 200 ரன்கள் எடுத்த அன்றைய தின இரவு தான் உறங்கவில்லை என்று சச்சின் தனது சுய சரிதையில் கூறியுள்ளார்.

Sachin tendulkar

அதில் அவர், 'அன்றைய தினம் மிகவும் அசதியாக இருந்தது. ஆனால், தூக்கம் வரவில்லை. அன்றைய இரவில் எனக்கு மொபைல் மூலம் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறினேன். அதற்கே இரண்டு மணி நேரம் ஆனது. மேலும், எனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டத்துக்குப் பிறகு எனது வீட்டுக்கு செல்வதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.

குறிப்பாக, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில், எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறை மிகவும் தனிமையாக இருந்தது. அந்த சூழலும் என்னை தூங்க விடவில்லை' என கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க