விஜய் ஹசாரே கோப்பை: தோனி அதிரடி சதம்!

விஜய் ஹசாரே கோப்பையில், தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் -  முகமது கைஃப் சத்தீஸ்கர் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து திணறியது. இதையடுத்து களமறிங்கிய கேப்டன் தோனி அதிரடி காட்டினார். அவர் 107 பந்துகளில் 129 ரன்கள் எடுக்க அணி 50 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்தது.

Dhoni

இதைத்தொடர்ந்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சத்தீஸ்கர் அணி களமிறங்க உள்ளது. முன்னதாக கர்நாடக அணியுடன் நேற்று நடந்த போட்டியில் ஜார்க்கண்ட் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!