வெளியிடப்பட்ட நேரம்: 02:25 (01/03/2017)

கடைசி தொடர்பு:07:52 (01/03/2017)

புனே பிட்சுக்கு 'மிக மோசம்' ரேட்டிங் அளித்த ஐசிசி நடுவர் ! 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில், முதல்  டெஸ்ட் போட்டி புனேவில் நடந்தது. இதில், இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் வெற்றியைச் சுவைத்திருக்கிறது ஆஸ்திரேலியா. 

இந்த நிலையில், புனே பிட்ச் மிகவும்மோசமாக இருந்ததாக ஐசிசிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார், நடுவர் கிறிஸ் பிராட். ஐசிசி இந்த ரிப்போர்ட்டை பிசிசிஐ-க்கு அனுப்பி இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. கடைசியாக இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய நாக்பூர் டெஸ்ட் போட்டியிலும் இதேபோன்ற சர்ச்சை எழுந்தது. அப்போது, பிட்ச் மிக மோசம் என ஐசிசி-க்கு புகார் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க