ஒரு ரன் த்ரில் வெற்றியுடன் இறுதிப்போட்டியில் நுழைந்த கிளாடியேட்டர்ஸ் அணி!

பாகிஸ்தானில் நடந்துவரும் பிஎஸ்எல் டி20 லீக்  தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டிக்கான முதல் குவாலிபையர் போட்டியில்,  டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஜால்மி அணியும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின.

kevin peterson

அப்ரிடி, சாமுவேல்ஸ், கம்ரான் அக்மல், வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ், கிறிஸ் ஜோர்டான் என நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது பெஷாவர் அணி. முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கெவின்  பீட்டர்சன், அதிகபட்சமாக 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 40 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து, சேஸிங்கில் களமிறங்கிய பெஷாவர் அணி, மூன்று ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் மாலன், ஹபீஸ் இருவரும் இணைந்து 139  ரன்கள் சேர்த்தனர். 

கடைசி ஓவரில்... ஏழு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பெஷாவர் அணியின் கேப்டன் சமி பேட்டிங் முனையில் இருந்தார். இறுதி ஓவரை முகமது நவாஸ் வீசினார். முதல் பந்தில்  ரன் இல்லை. இரண்டாவது பந்தில் சமி ஒரு பவுண்டரி அடித்தார், மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்று பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில், ஜோர்டான் அவுட் ஆனார். அதற்கடுத்த இரண்டு பந்துகளில் வஹாப் ரியாஸ், ஹாசன் அலி இருவருமே ரன் அவுட் ஆனார்கள். கடைசி மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது பெஷாவர் அணி. இதையடுத்து, ஒரு ரன்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது கிளாடியேட்டர்ஸ் அணி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!