வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (02/03/2017)

கடைசி தொடர்பு:18:10 (02/03/2017)

'சச்சினால் முடியாததை கோலி செய்து காட்டினார்'- புகழாரம் சூட்டும் கங்குலி

Ganguly

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர், இந்திய அணி விளையாடிய 19 டெஸ்ட்களில் யாரிடமும் தோற்காமல் இருந்த சாதனையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, முதல் இன்னிங்சில் டக் அவுட்டும், இரண்டாவது  இன்னிங்சில் 13  ரன்னிலும் ஆட்டமிழந்தார். இந்நிலையில், நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் தொடங்குகிறது. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 'கோலி ஒரு மனிதர் தான். அவருக்கும் என்றாவது தோல்வி ஏற்படும். அவர், புனேவில் நடந்த முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் முன்னர், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து அடித்த நான்கு டெஸ்ட் சதங்கள் அசாத்தியமானவை. அதைப் போன்ற ஒரு விஷயத்தை சச்சின் டெண்டுல்கர் கூட செய்ததில்லை' என்று கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க